அஸ்ஸலாமு அலைக்கும், உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தி மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய “கொரோனா” வைரஸால் உலக மக்கள் அனைவரும் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளார்கள், இக்கொடிய நோய் விரைவில் நம்மை விட்டு விலகி மறையவும், நம் அனைவரின் இயல்பான வாழ்க்கை திரும்பவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றாம், மேலும் உண்ண உணவு, உடுத்த உடை மற்றும் இருக்க இடம் இல்லாமல் தவிக்கும் மக்கள் அனைவருக்கும் ஜாதி,மத,பேதமின்றி நமது நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளையின் சார்பாக சாப்பாடு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்க்கப்பட்டது.