அஸ்ஸலாமு அலைக்கும், கடந்த இரண்டு மாதங்காலமாக உலகையே அச்சத்தில் ஆழ்த்தி அனைத்து மக்களையும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கியிருக்கும் கொரோனா கொடியே நோயின் பேரழிவின் காரணத்தால் அனைத்து வழிப்பாட்டுத் தளங்களும் மூடப்பட்டுள்ளது, வருடா வருடம் நாகூர் தர்கா ஷரீஃப் உட்புறம் நமது அறக்கட்டளையின் சார்பாக இஸ்லாத்திற்காக தனது உயிரையே தியாகம் செய்து சுமார் 1000 நபர்களை கொண்ட எதிரிகளின் கூட்டத்தை வீழ்த்தி வெற்றி கண்ட 313 பத்ரு ஸஹாபாக்களின் நினைவு நாளில் இஃப்தார் மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைப்பெறும், ஆனால், இப்பொழுது உள்ளே கால சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் நமது அறக்கட்டளை சார்பாக கிச்சடா கஞ்சி (நாகூர் ஸ்பெஷல் கஞ்சி), நூடுல்ஸ் மற்றும் ஜூஸ் ஆகியவை துணி பைகளில் வைத்து இஃப்தார் (நோன்பு திறக்கும்) நேரத்தில் அவரவர்கள் இல்லம் தேடிச்சென்று பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது, இத்தகைய செயல்பாட்டினை இந்த ஊரங்கு காலத்தில் மிகச்சிறப்பாக செய்தமைக்கு பொதுமக்கள் அனைவரும் நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் M.H.ஹாஜா சம்சுதீன் சாஹிப், காதிரி, ஷிஷ்தி அவர்களை வாழ்த்தி பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share Article: