அஸ்ஸலாமு அலைக்கும், ரமலான் பிறை – 17 ம் நாளில் 313 பத்ரு ஸஹாபாக்கள் இஸ்லாத்திற்காக போராடி பெற்ற வெற்றி மற்றும் அவர்களின் உயிர் தியாகத்தை நினைவு கூறும் வகையில் புனிதமிக்க நாளில் ஸஹர் நேரத்தில் சிறப்புமிக்க குர்ஆன் ஓதி ஹதியா செய்து ராத்தீப் மஜ்லிஸ் நடைபெற்றது, இப்புனிதமிக்க மிக்க நிகழ்வில் கலந்துக்கொண்ட மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நோன்பு பிடிக்க “ஸஹர். சாப்பாடு” என்னும் உணவு வழங்கப்பட்டது.
அஸ்ஸலாமு அலைக்கும், நமது கண்மணி நாயகம் ரசூலே கரீம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தோழர்கள் 313 பத்ரு ஸஹாபாக்கள் இஸ்லாதிற்காக போர் செய்து உயிர் தியாகம் செய்த நாள் இப்புனிதமிக்க ரமலான் பிறை -17, பத்ரு ஸஹபாக்களின் தியாக திருநாளை நினைவூட்டும் வகையில் நமது நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பாக நாகூர் தர்கா ஷரீபில் “பத்ரு மௌலிது மஜ்லிஸ்” நடைப்பெற்றது மற்றம் ஜாதி,மத,பேதமின்றி சுமார் 1000 நாபர்களுக்கு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி “பத்ரு இஃப்தார்” நடைபெற்றது, இப்புனிதமிக்க நிகழ்வில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு பத்ரு ஸஹாபாக்களின் பரக்கத்தை பெற்று மகிழ்ந்தனர். மேலும் இப்புனிதமிக்க நிகழ்வில் மனிதநேயம் மற்றும் மதநல்லிணக்கம் கொண்ட கல்வியின் காவலர் டாக்டர் V.திவாகரன் M.Sc, P.hd, D.E.M, அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்.